/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : அக் 25, 2025 07:53 AM
கள்ளக்குறிச்சி: வடக்கிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மழை, அதிக காற்று, இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட திறந்தவெளி மரங்களுக்கடியில் கால்நடைகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். நனைந்த அடர் தீவனத்தை கால்நடைகளுக்கு அளிக்ககூடாது. மழைக் காலத்தில் பூஞ்சை தொற்றில்லாத அடர் தீவனத்தை அளிக்கலாம். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சம விகிதத்தில் அளிக்க வேண்டும்.
கால்நடைகள் தொடர்ந்து மழை வெள்ளத்தில் நனையாதவாறு பாதுகாத்திட வேண்டும். கால்நடை மற்றும் கோழிகளுக்கு வெதுவெதுப்பான நீரை பருக அளிக்கலாம்.
அதிக நேரம் நீர் தேங்கிய இடங்களில் கட்டி வைப்பதை தவிர்ப்பதன் மூலம் குளம்பு அழுகல் நோயினை தவிர்க்கலாம். கால்நடை கொட்டகைகள் மழை நீர் ஒழுகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொட்டகை ஈரமாகவும், அசுத்தமாகவும் இருந்தால் மடி நோய் ஏற்படாலாம் என்பதால், மடிக்கான கிரிமிநாசினி மற்றும் மூலிகைகளை கால்நடை மருத்துவரின் அறிவுரை படி பயன்படுத்தலாம். முறையான குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
மழையில் ஆடுகளை வெளியில் மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம். கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

