/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ள மகளிர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ள மகளிர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ள மகளிர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ள மகளிர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மார் 23, 2025 09:52 PM
கள்ளக்குறிச்சி : மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சமூக நலன், மகளிர் உரிமைத் துறையின் 'சகி' எனும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கள்ளக்குறிச்சியில் இயங்கி வருகிறது. பழைய அரசு மருத்துவமனை அருகே கே.பி.ஆர். நகர், விளாந்தாங்கல் சாலையில் இயங்கும் இந்த மையத்தில் வீடு, பொது இடம், பணி இடம் மற்றும் குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகை வன்முறைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மேலும், உடனடி மீட்பு பணி, காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இம்மையம் மூலம் 2022 ஜனவரி முதல் 2025 பிப்ரவரி வரை இலவச பெண்கள் உதவி 181 மூலமாகவும், நேரடியாகவும் 1,694 பேருக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. 356 பெண்களுக்கு காவல்துறை உதவி, 21 பெண்களுக்கு சட்ட உதவி, 41 பெண்களுக்கு மருத்துவ உதவி, 18 பெண்களுக்கு நீண்ட கால தங்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 578 பெண்களுக்கு ஆலோசனை, 388 பெண்களுக்கு சேவை மையத்திலேயே உணவுடன் தங்கும் வசதி, பிற உதவிகள் செய்து குடும்பத்தில் இணைந்து வாழ வழி செய்து கொடுக்கப்பட்டது.
இந்த மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் அலுவலகங்கள் மூலமாகவும் அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.