/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரங்கநாத பெருமாள் கோவிலில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரங்கநாத பெருமாள் கோவிலில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
அரங்கநாத பெருமாள் கோவிலில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
அரங்கநாத பெருமாள் கோவிலில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : டிச 18, 2024 07:47 AM

ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் மேற் கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.
வாணாபுரம் அடுத்த திருவரங்கத்தில் ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுற்றுச் சுவர், சன்னதிகள், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிய தேர், தேர் நிறுத்த கொட்டகை, பணியாளர் குடியிருப்பு, அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி, இடிதாங்கி உட்பட 12 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவிலில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, கோவிலுக்கு அருகாமையில் உள்ள பயன்பாடில்லாத குளத்தை மண் கொட்டி சமன்படுத்தி அங்கு வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது. பழமை வாய்ந்த துவக்க பள்ளி கட்டடத்தை அகற்றுதல்.
கோவிலுக்கு எதிரில் உள்ள கடைகளை இடித்து படிக்கட்டுகள் கட்டுதல், மாற்று இடத்தில் கடைகளை கட்டுதல் உட்பட மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், வழக்கறிஞர் லட்சுமிகுமார், அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி, நிர்வாகி ராஜிவ்காந்தி, ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.