/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாணியந்தலில் கிராம சபை கூட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
வாணியந்தலில் கிராம சபை கூட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
வாணியந்தலில் கிராம சபை கூட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
வாணியந்தலில் கிராம சபை கூட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஆக 15, 2025 10:57 PM

கள்ளக்குறிச்சி, ஆக. 16-
வாணியந்தல் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. வாணியந்தல் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சியில் துாய்மையான குடிநீர் விநியோகம் உறுதி செய்வது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான விபரங்கள். ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊராட்சியில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கு விவரங்கள் கிராம பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மேலும் ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்காக மேற் கொள்ளப்படும் சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
தொடர்ந்து மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை கிராம அளவில் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது.
கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் ரமேஷ்குமார், சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், சாந்தி உட்பட அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.