/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
சாலை அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : மே 20, 2025 06:44 AM

கள்ளக்குறிச்சி: கருவேலம்பாடி கிராம மக்கள் தார்சாலை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கருவேலம்பாடி மலைவாழ் மக்கள் அளித்த மனு:
கல்வராயன்மலை தாலுகா, குண்டியாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கருவேலம்பாடி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. நொச்சிமேடு - கருவேலம்பாடி கிராமத்திற்கு செல்லும் 6 கி.மீ., சாலை பல ஆண்டுகளாக கரடு முரடான மண் சாலையாக உள்ளது.
இவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர், கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், அவ்வழியாக விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதில் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நொச்சிமேடு - கருவேலம்பாடி மண் சாலையை தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.