/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 18, 2024 06:14 AM
கள்ளக்குறிச்சி, : தேர்தல் நன்னடத்தையொட்டி தனி நபர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்று கை துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறை நிலுவையில் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தாங்களே வைத்திருப்பதும், உரிமம் பெறாமல் எவரேனும் துப்பாக்கி வைத்திருப்பது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

