/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவமனையில் போதுமான மருந்துகள்: கலெக்டர் உத்தரவு
/
மருத்துவமனையில் போதுமான மருந்துகள்: கலெக்டர் உத்தரவு
மருத்துவமனையில் போதுமான மருந்துகள்: கலெக்டர் உத்தரவு
மருத்துவமனையில் போதுமான மருந்துகள்: கலெக்டர் உத்தரவு
ADDED : மே 01, 2025 06:14 AM

கள்ளக்குறிச்சி : மாவட்ட மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள டாக்டர்களிடம், கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில், 2024-- 25ம் ஆண்டில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள், குழந்தைகள் தடுப்பூசி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரசவம் உள்ளிட்டவைகள் குறித்து, டாக்டர்களிடம் கலெக்டர் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான அளவில் மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவில் இருக்கை வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்தாண்டு தேசிய நலக்குறியீடுகளில் முன்னேற்றம் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட சுகாதார ஆய்வின் முடிவில், 2024--25ம் ஆண்டில் தேசிய நலக் குறியீடுகளில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கூட்டத்தில் சுகாதார துறை இணை இயக்குனர் ராஜா, நலப்பணிகள் இணை இயக்குனர்கள் மாலினி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.