/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கலெக்டர் உத்தரவு; அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவு

ADDED : ஏப் 08, 2025 06:34 AM

கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க திடீர் தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு கடைகளில் மேற்கொள்ளப்படும் திடீர் தணிக்கை விபரம், மருந்தகங்கள் ஆய்வு, பதிவு செய்த வழக்குகள் விபரம், பொதுமக்கள் மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையின் கீழ் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடைகள், அவற்றை மாற்றி அமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
அதேபோல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்திடும் வகையில் கடைகளில் தொடர்ந்து திடீர் தணிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.டி.ஆர்.ஓ., ஜீவா மற்றும் காவல் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.