/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூலை 12, 2025 11:23 PM

கள்ளக்குறிச்சி: தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் சிறந்த பள்ளி மற்றும் தலைமையாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களை கலெக்டர் பிரசாந்த் வாழ்த்தி பாராட்டினார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கீதா, திருக்கோவிலுார் ஒன்றியம் ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலை, கேடயமும் வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தியாகதுருகம் ஒன்றியம் பிரிதிவிமங்கலம் ஊராட்சி ஒன்றிய (இந்து) நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் பள்ளியின் பராமரிப்புக்காக ரூ.10 லட்சம் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டடது. விழுது பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள், கலெக்டர் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார்.