/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமூக பாதுகாப்பு திட்டத்தில் 8,620 பேருக்கு தேசிய முதியோர் ஓய்வூதியம் வழங்கல் கலெக்டர் பிரசாந்த் தகவல்

ADDED : டிச 05, 2025 05:32 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 8,620 பயனாளிகளுக்கு ரூ.51.20 கோடி மதிப்பிலும், தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 467 பயனாளிகளுக்கு ரூ.3.31 கோடி மதிப்பிலும், தேசிய விதவைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 3,284 பேருக்கு ரூ.19.50 கோடி மதிப்பிலும், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 7,620 பயனாளிகளுக்கு ரூ.54.10 கோடி மதிப்பிலும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆதரவற்ற விதவை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 3,698 பெண்களுக்கு ரூ.21.96 கோடி மதிப்பிலும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 135 பெண்களுக்கு ரூ.80.19 லட்சம் மதிப்பிலும், 50 வயதை கடந்த திருமணமாகாத ஏழை மகளிருக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 63 பெண்களுக்கு ரூ.37.42 லட்சம் மதிப்பிலும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 206 பேருக்கு ரூ.1.22 கோடி மதிப்பிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 59 ஆயிரத்து 400 ரூபாயும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.