/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை காலத்திற்கு முன்னதாக வரத்து வாய்க்கால்களை துார்வர வேண்டும் கலெக்டர் பிரசாந்த் உத்தரவு

ADDED : அக் 09, 2025 02:21 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள வரத்து வாய்க்கால்களை மழை காலத்திற்கு முன்னதாக துரிதமாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகள் குறித்து தனித்தனியாக விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் கிராமப்புறங்களில் உள்ள வரத்து வாய்க்கால்களை மழைக் காலத்திற்கு முன்பாக துரிதமாக துார்வாரி சீரமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தவறாமல் குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் தினசரி சேரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.