UPDATED : ஆக 29, 2026 09:37 PM
ADDED : ஆக 29, 2026 08:33 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் வளர்ச்சி பணி திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா நேற்று திருக்கோவிலுார் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணி திட்டங்களான துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரமாக்கல் மையம்; ரூ. 7.96 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கழிவு நீர் மற்றும் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; ரூ.5.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் மற்றும் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தினசரி சந்தை அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு, ரூ.2.46 கோடி மதிப்பில் அமைய உள்ள திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, நகராட்சி கமிஷ்னர் திவ்யா, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
