/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்து துவக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு
/
இந்து துவக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 23, 2024 03:48 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளாக நேற்று காலை சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து துவக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். பின் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
டி.ஆர்.ஓ., சத்யநாராயணன், தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், சத்யநாராயணன், பி.டி.ஓ., ஜெய்கணேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து சங்கராபுரம் உழவர் சந்தையில் கலைக்டர் கள ஆய்வு செய்தார். அப்போது, உழவர் சந்தையில் காய்கறிகள் குறித்த விலைக்கு விற்கப்படுகிறதா என்றும், விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தார்.
தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேளாண் இணை இயக்குனருக்கு அறிவுறுத்தினார். பேருராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், ஊரக வாழ்வாதார திட்ட இணை இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஸ்வரன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
பின் சங்கராபுரம் பேருராட்சி சார்பில், 5வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை சேகரிக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். பேருராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் உடனிருந்தார்.