/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
/
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 09, 2024 04:13 AM
கள்ளக்குறிச்சி : முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன் பெறும் வகையில் உதவி தொகை வழங்கப்படுகிறது.
அதில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவி தொகை, இயற்கை மரண உதவித் தொகை, தற்காலிக இயலாமைக்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட வில்லை யெனில், தங்கள் கிராமத்தின் வி.ஏ.ஓ., அல்லது சம்மந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆகியோரை அணுகி உறுப்பினர்களாக சேர்ந்து திட்டங்களில் பயன்பெற லாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.