/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு
/
வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு
ADDED : ஏப் 21, 2025 10:51 PM
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 25ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனை துறையைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.