/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
ADDED : செப் 18, 2025 10:59 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களுடன், அனைத்து துறை அலுவலகங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு தளத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ஷெரிப் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.