/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 30, 2024 05:32 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலெக்டர் அலுவலக கட்டு மான பணிகள் நடந்து வருகிறது.
இதில் கலெக்டர் அலுவலக அறை, கூட்டரங்குகள், சி.இ.ஓ., அலுவலகம் உட்பட அரசின் அனைத்து துறைகளின் மாவட்ட அலுவலங்களும் 8 தளங்களில் அமைக்கப்படுகிறது.
அலுவலக கட்டுமான பணிகளின் திட்ட வரைப்படம், பணி நடைபெறும் இடம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கண்காணிப்பு பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் ேஹமா, உதவி செயற்பொறியாளர் ராஜிவ், ஒன்றிய சேர்மன்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், கலெக்டர் அலுவலகம் கட்டவில்லை என்ற குறை பொதுமக்களிடம் இருந்தது.
பொதுமக்கள் நலன் கருதி கட்டுமான பணிகளை விரைவாக முடித்து வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க ஒப்பந்ததார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வராயன்மலையில் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
நெடுஞ்சாலை துறையின் சார்பிலான சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.