/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி : கலெக்டர் ஆலோசனை
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி : கலெக்டர் ஆலோசனை
ADDED : மே 08, 2025 01:51 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல், நான் முதல்வன், கல்லுாரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சியில் 12ம் தேதி, சங்கராபுரத்தில் 13ம் தேதி, உளுந்துார்பேட்டையில் 14ம் தேதி, திருக்கோவிலுாரில் 15ம் தேதி நடக்கிறது.
இதில் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்லுாரிக் கனவு நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை, மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.