/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடி பழக்கத்தை கண்டித்த பாட்டி: கல்லுாரி மாணவர் தற்கொலை
/
குடி பழக்கத்தை கண்டித்த பாட்டி: கல்லுாரி மாணவர் தற்கொலை
குடி பழக்கத்தை கண்டித்த பாட்டி: கல்லுாரி மாணவர் தற்கொலை
குடி பழக்கத்தை கண்டித்த பாட்டி: கல்லுாரி மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 15, 2025 10:33 PM

கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லுாரி மாணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகன் நித்திஷ், 19; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் பாட்டி முனியம்மாள் வீட்டில் தங்கி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை முனியம்மாள் கண்டித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த நித்திஷ், பெங்களூரு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நித்திஷ் குமாரின் செருப்பு தண்ணீரில் மிதந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் நித்திஷ் உடல் மீட்கப்பட்டது. வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.