UPDATED : நவ 28, 2026 09:22 PM
ADDED : நவ 28, 2026 09:22 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் கிருத்திகா,19; அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
காரனுாரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கஜேந்திரன். இவர், கிருத்திகாவை காதலித்துள்ளார். இதனையறிந்த பெரியசாமி, இருவரையும் கண்டித்தார். இதனால், இருவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கஜேந்திரன் இந்திலியில் உள்ள கிருத்திகா வீட்டிற்கு சென்று அவரை திட்டியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த கிருத்திகா நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் கஜேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
