தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லுாரி மாணவர் பலி

 மரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லுாரி மாணவர் பலி

 மரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லுாரி மாணவர் பலி


ADDED : மார் 13, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: திருநாவலுார் அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லுாரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் குருநாதன்,20; பி.இ., மெக்கானிக்கல் மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த பிப்., 21ம் தேதி குருநாதன் தனது விளைநிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், குருநாதனுக்கு முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்த குருநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us