/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : செப் 01, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கல்லுாரிக்கு சென்ற மாணவியை கண்டுபிடித்து தரும்படி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்த வேலு மகள் திவ்யா,18; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி கள்ளக்குறிச்சி சென்ற திவ்யா மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி வேலு சங்கராபுரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.