ADDED : செப் 23, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்லுாரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சங்கராபுரம் அடுத்த அழகாபுரம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் ரவி மகள் தேவிகா,19; இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படிக்கிறார். கடந்த 22ம் தேதி காலை வழக்கம்போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற தேவிகா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேவிகாவை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
