/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு
/
கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 19, 2025 06:28 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கல்லுாரி முதல்வர் தர்மராஜா செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல் ஆகிய இளங்கலை பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதளம் மூலம் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிகலாம்.
மேலும் கல்லுாரியில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.