ADDED : மே 21, 2026 08:34 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெல்லமண்டி கலியனின் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி காந்தி ரோடு பகுதியை சேர்ந்த வெல்லமண்டி கலியனின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, காந்தி ரோட்டில் உள்ள கே.எஸ்.கே., லா அசோசியேட்ஸ் அலுவலகத்திற்கு முன் கலியனின் உருவப்படம் நிறுவப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
மறைந்த கலியனின் மனைவி கொளஞ்சி, மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மகள்கள் தமிழ்செல்வி, கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலியனின் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கும், முதியோர் மற்றும் கருணை இல்லங்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
