/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஜூலை 10, 2025 09:02 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்வி குழும தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் மோகனசுந்தர் வரவேற்று, துறைத் தலைவர்களை அறிமுகம் செய்தார். கல்லுாரி செயலாளர் கோவிந்தராஜூ, துணைத் தலைவர் ரவிசங்கர், டீன் அசோக் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் மற்றும் ஷியாம்சுந்தர் ஆகியோர் முதலாமாண்டு கல்லுாரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளை வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள் பிரவீனா, சக்திபிருந்தா, நர்கீஸ்பேகம், அங்குராஜ், அகமதுசுல்தான், சக்திவேல், தங்கவேல், அருள், ராஜா, பொறுப்பாசிரியர்கள் நிதிஷா, மேகலை, அஞ்சலை, பவுலின் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.