ஜி.ஆரியூர் மாதிரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஜி.ஆரியூர் மாதிரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : செப் 12, 2026 06:04 PM

திருக்கோவிலுார்: குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஜி.அரியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
குறுவட்ட அளவில் நடந்த தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் ஜி.அரியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், அடுத்ததாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க 80 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மேலும் 9 மாணவர்கள் ஜூடோ போட்டியிலும், 15 மாணவர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் பங்கு பெற உள்ளனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் திவ்யா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களை பாராட்டினர்.
