/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உறுப்பினர் சேர்க்கையில் முதலிடம் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு
/
உறுப்பினர் சேர்க்கையில் முதலிடம் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு
உறுப்பினர் சேர்க்கையில் முதலிடம் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு
உறுப்பினர் சேர்க்கையில் முதலிடம் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 14, 2025 03:49 AM

ரிஷிவந்தியம் : தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் அதிக உறுப்பினர்களை சேர்த்து, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி முதலிடத்தில் இருப்பதாக தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் கீழ் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளும், 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளீர்களா, அரசு திட்டங்கள் ஏதேனும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்து, சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்குகின்றனர்.
பொதுமக்களிடம் 6 கேள்விகள் கேட்டு, படிவத்தில் கையெழுத்து பெற்று, ஓ.டி.பி., மூலம் உறுப்பினராக சேர்க்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி, ஒரு லட்சத்து 34 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பதாக கூறி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் ரிஷிவந்தியம் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.