/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநாவலுாரில் கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
திருநாவலுாரில் கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 12:00 AM

உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் இ. கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு இ. கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆரியநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ரூ.600 கூலி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எல்லப்பன், மணி, பாலமுருகன், பழனிச்சாமி, பார்வதி, வீரன், அன்பழகன், கொளஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.