தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..


ADDED : அக் 03, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பையால் துர்நாற்றம்

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பாலாஜி, கள்ளக்குறிச்சி .

பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையோரம் உள்ள சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

பிரசாந்த், கள்ளக்குறிச்சி

ஏரியில் மண் திருட்டு

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் பெரிய ஏரியில் விடிய விடிய கிராவல் மண் திருடப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.

ராஜா, தியாகதுருகம்.

நாய்கள் தொல்லை

சங்கராபுரம் நகர பகுதியில் சுற்றி திரியும் அதிகளவிலான நாய்கள் சாலையில் நடந்த செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது கடித்து அச்சுருத்தி வருவதால் பீதியடைந்து உள்ளனர்.

அறிவழகன், சங்கராபுரம் .

ஆற்றில் மணல் கொள்ளை

கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு, மோட்டாம்பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள மணி ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கொள்ளை நடந்து வருகிறது.

கோவிந்தசாமி, மோட்டாம்பட்டி.

சுடுகாட்டு ஆக்கிரமிப்பு

புகைப்பட்டி சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்துள்ளதால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கண்ணன், புகைப்பட்டி.

கழிவு நீர் தேக்கம்

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் நுழைவாயில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

சண்முகம், புதுப்பட்டு.

சுகாதார சீர்கேடு

மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் தண்ணீர் தொட்டி அருகே குப்பைத் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சுதாகர், மூங்கிப்துறைப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us