/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையோரத்தில் கட்டடம் அளவீடு கோரி புகார் மனு
/
சாலையோரத்தில் கட்டடம் அளவீடு கோரி புகார் மனு
ADDED : ஜன 23, 2024 04:37 AM
கள்ளக்குறிச்சி, : கச்சிராயபாளையத்தில் சாலையோர கட்டடம் தொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில் அளவீடு பணிகள் கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு:
கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து தனிநபர் மூலம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலுவலர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மனுதாரருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அலுவலர்கள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கட்டடத்தினால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னிலையில் சரியான முறையில் அளவீடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

