/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.பாண்டலத்தில் போலி வாக்காளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு
/
அ.பாண்டலத்தில் போலி வாக்காளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு
அ.பாண்டலத்தில் போலி வாக்காளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு
அ.பாண்டலத்தில் போலி வாக்காளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு
ADDED : டிச 09, 2025 06:05 AM

கள்ளக்குறிச்சி: அ.பாண்டலம் கிராமத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை சேர்க்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
மனு விபரம்:
சங்கராபுரம் சட்டசபை தொகுதி அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வெளியூர் போலி வாக்காளர்களை சேர்த்து பதிவு செய்திருந்தனர்.
போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்ககோரி ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்படி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டாலும் மேலும் நுாற்றுக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர்.
இதற்கிடையே தற்போது சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை மொத்தமாக தங்களிடம் வழங்குமாறும், வெளியூர் வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளர்களை நீக்ககூடாது எனவும் மிரட்டுகின்றனர்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.