/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்! மொபைல் போன் எண்கள் வெளியீடு
/
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்! மொபைல் போன் எண்கள் வெளியீடு
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்! மொபைல் போன் எண்கள் வெளியீடு
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்! மொபைல் போன் எண்கள் வெளியீடு
ADDED : மார் 22, 2024 10:23 PM
கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி விதிமீறல்கள், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் செலவின மேற்பார்வையாளர் உள்ளிட்டகண்காணிப்பு குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க அதிகாரிகளின்மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையோட்டி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுத்து நியாயமான முறையில் அமைதியாக தேர்தலை நடத்திடும் பொருட்டு தேர்தல் செலவின மேற்பார்வையாளராக மனோஜ்குமார் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டசபை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி செலவின மேற்பார்வையாளர்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான பணிகளுக்கு நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தங்கள் பகுதியில் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு புகார்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா 93105 98701, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உளுந்துார்பேட்டை சக்திவேல் 9442134126, ரிஷிவந்தியம் குப்புசாமி 9952354899, சங்கராபுரம் கீதா 88258 94085, கள்ளக்குறிச்சி லுார்துசாமி 9445000421 ஆகிய மொபைல் எண்களில் தெரிவிக்கலாம்.
அதேபோல், உதவி செலவின மேற்பார்வையாளர்கள் உளுந்துார்பேட்டை ஐயப்பன் 96290 77805, ரிஷிவந்தியம் அன்பழகன் 99435 31423, சங்கராபுரம் தேவி 6379886721, கள்ளக்குறிச்சி சரவணன் 8939598346 ஆகியோரது மொபைல் எண்ணிற்கு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

