/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கம்
/
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கம்
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கம்
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கம்
ADDED : செப் 16, 2025 11:44 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியில் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாணவி சத்யா வரவேற்றார். இதில் சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக கணினி பேராசிரியர் முத்துக்குமரன் பங்கேற்று இயற்கை மொழி செயலாக்கம் என்ற தலைப்பிலும், சிங்கப்பூர் டி.பி.எஸ் வங்கியின் துணை தலைவர் கார்த்திகேயன் இணையவழியாக, ஜாவா வின் எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கணினி பயன்பாட்டியில் துறை சம்மந்தமாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கல்லுாரி பேராசிரியர்கள் செந்தில்குமார், பாண்டியன், சூரியன், சத்யா, தீபா, ரம்யாதேவி, கலைவாணி, விஷ்ணுபிரதாப் மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவர்கள் கதிரவன், அர்ஷின் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவர் ஷேக் மீரான் நன்றி கூறினார்.