திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்
திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்
UPDATED : அக் 09, 2026 04:50 PM
ADDED : அக் 09, 2026 04:46 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் கொளஞ்சியப்பா வரவேற்றினார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், இணை செயலாளர் சத்யநாராயணன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் மீனாட்சி வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர் திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் இந்துமதி எவிகேஷன் ஏஐ மற்றும் சோஷியல் மீடியா டூல்ஸ் பார் அகாடமிக் எக்ஸலன்ஸ் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர் விஜயசாந்தி நன்றி கூறினார்.
