/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கணினி பயிற்சி
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கணினி பயிற்சி
ADDED : நவ 11, 2024 05:16 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 300 மாணவிகளுக்கு குறுகிய கால கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு குறுகிய கால கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, உளுந்துார்பேட்டை, திருநாவலுார், மணலுார்பேட்டை, திருக்கோவிலுார், இன்னாடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் 300 அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்தர தொழில்நுட்ப ஆய்வக வசதியுடன் உள்ள பள்ளிகளில் தகுதியான கணினி பயிற்றுநர்களைக் கொண்டு 60 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி மாணவிகளின் பள்ளி மேற்படிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.