தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி

 திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி

 திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி


ADDED : ஜன 16, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டு துறை சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.

துறைத்தலைவர் அனுராதா வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாதார சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்துரை வழங்கினர்.

ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வணிகத்துறையில் கணினி பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

வணிகவியல் மற்றும் வணிக கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

துறைத்தலைவர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us