/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிதிநிலை அறிக்கையில் குழப்பம்; தொல்லியல் துறை தெளிவுபடுத்துமா?
/
நிதிநிலை அறிக்கையில் குழப்பம்; தொல்லியல் துறை தெளிவுபடுத்துமா?
நிதிநிலை அறிக்கையில் குழப்பம்; தொல்லியல் துறை தெளிவுபடுத்துமா?
நிதிநிலை அறிக்கையில் குழப்பம்; தொல்லியல் துறை தெளிவுபடுத்துமா?
ADDED : மார் 15, 2025 08:19 PM
திருக்கோவிலுார்; தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டம், ஆதிச்சனுார் என்பதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டம் என அறிவிக்கப்பட்டதாக தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிச்சனூரில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது விழுப்புரம் மாவட்ட ஆதிச்சனூர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தமிழ் பண்பாட்டின் சிறப்புகளை உலகறிய செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, வரும் 2025-26ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிச்சனுார் உட்பட 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா, முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தகிருஷ்ணாபுரத்தை அடுத்து இருக்கும் ஊர் தான் ஆதிச்சனுார், துரிஞ்சல் ஆற்று கரையில் இருக்கும் கிராமத்தில் கல்பதுக்கைகள், கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ள அரசுக்கு முன்மொழியப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சனுார்தான் தவறுதலாக கள்ளக்குறிச்சி மாவட்டம் என அறிவிக்கப்பட்டு இருப்பதாக விவரம் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொல்லியல் துறை தெளிவுபடுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.