தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காங்., மறியல் 15 பேர் கைது

காங்., மறியல் 15 பேர் கைது

காங்., மறியல் 15 பேர் கைது


ADDED : ஆக 21, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுதும் நடந்த தேர்வுகளில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக டில்லியில் போராடிய மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் டில்லி காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அதற்கு ஆதரவளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் காங்., மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமையில் அக்கட்சியினர் சங்கராபுரத்தில் நேற்று மாலை 4:45 மணியளவில் மறியலில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

உடன் சங்கராபுரம் போலீசார், வட்டார தலைவர்கள் அப்துல் கலாம் ஆசாத், நாராயணன், பிரபு, செல்வராஜ், மாணவர் காங்., மாநில பொதுச் செயலாளர் ஆதில் கான் 15 பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us