தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 02, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் காங்., சார்பில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்., மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, பிரிவு மாநில துணைத்தலைவர் சீனிவாசன் , நகர தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சரண்ராஜ் வரவேற்றார்.

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசியல் உள்நோக்கத்துடன் வழங்குகள் பதிவு செய்யும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வட்டார தலைவர்கள் முனியப்பன், கணேசன், சார்லஸ் ஜான் பாஸ்கோ, செல்வராஜ், நாராயணன், அய்யப்பன், ஞானகுரு, செல்வம், ஸ்டீபன் ராஜ் ராமலிங்கம், மதுரை காங்., கமிட்டி தலைவர்கள் கோவிந்தராஜ், முருகன், கமுருதின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us