/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற சிஷ்யா கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

ADDED : நவ 08, 2025 02:14 AM

திருக்கோவிலுார்: திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சிஷ்யா கலை அறிவியல் கல்லுாரி மாணவிக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சு.வாளவெட்டி, சிஷ்யா கலை அறிவியல் கல்லுாரி மாணவி ரம்யா, திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் நேரு, பொருளாளர் மணி, துணைத்தலைவர் சாந்தகுமார், இணை செயலாளர் கண்ணன் மாணவியை பாராட்டி பேசினர். மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் பவன் குமாரும் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி இயக்குனர் மகாதேவன், கல்லுாரி முதல்வர் நாராயணசாமி நன்றி கூறினர்.