/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில பயிர் விளைச்சல் போட்டி வெற்றி பெற்ற விவசாயிக்கு பாராட்டு
/
மாநில பயிர் விளைச்சல் போட்டி வெற்றி பெற்ற விவசாயிக்கு பாராட்டு
மாநில பயிர் விளைச்சல் போட்டி வெற்றி பெற்ற விவசாயிக்கு பாராட்டு
மாநில பயிர் விளைச்சல் போட்டி வெற்றி பெற்ற விவசாயிக்கு பாராட்டு
ADDED : டிச 22, 2025 05:55 AM

கள்ளக்குறிச்சி: பயிர் விளைச்சல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த கள்ளக்குறிச்சி விவசாயியை கலெக்டர் பிரசாந்த் பாராட்டினர்.
வேளாண்மை துறை சார்பில் கடந்த 2024-25ம் ஆண்டு நடந்த எள் பயிருக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலுார் வட்டம் பா.
கிள்ளனுாரை சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் என்பவர் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வெற்றி பெற்ற விவசாயி வெங்கடேசனுக்கு, ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சான்று பெற்ற விவசாயி, கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.