ADDED : ஆக 25, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மாவட்ட துணை தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார்.
முன்னாள் பேரூராட்சி தலைவர் மணி, கலை இலக்கிய பிரிவு கிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் சங்கதமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் சஞ்சய்காந்தி வரவேற்றார். மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷ மிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வி.சி., கட்சி மாநில துணை செயலாளர் பாசறைபாலு, இளைஞர் காங்., மாநில பொது செயலாளர் விஜய் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர் கதிரவன் நன்றி கூறினார்.