/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்
/
கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 05:01 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காங்., சார்பில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், துரைராஜ், இளவரசன், ஜெயச்சந்திரன், ராஜ்மோகன், முத்தமிழ் கண்ணன், இளையபெருமாள் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
இதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் பவுன்னம்பால், ராஜேஸ்வரி, பவானி, அஞ்சலை, மாயஜோதி வட்டாரத் தலைவர்கள் தனபால், கிருபானந்தம், அபுல் கலாம் ஆசாத், செல்வராஜ், அப்பாராசு, சற்குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.