ADDED : ஆக 15, 2026 04:00 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டமும், சத்தியாகிரக ஊர்வலமும் நடந்தது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அந்த மேடையில் தீட்டு ஏற்பட்டதாக தெரிவித்து வலதுசாரி அமைப்பினர் கங்கை நதி நீரால் சுத்தம் செய்து, பூஜை செய்துள்ளனர். இந்த வன்கொடுமைக்கு எதிராக பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதை கண்டித்தும், வன்கொடுமை செயலில் ஈடுபட்ட அமைப்பை தடை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, எஸ்.சி., பிரிவு மாநில துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
நகர தலைவர்கள் திருப்பதி ராஜ், கோவிந்தராஜ், தேசிங்கு ராஜா, ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் அசோக், கவுதம், முனியப்பன், ராமலிங்கம், செல்வராஜ், நாராயணன், பிரபு, எஸ் அப்துல் கலாம் ஆசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
