/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
/
அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
ADDED : ஆக 04, 2025 11:24 PM

சின்னசேலம்: நாகக்குப்பம் அரசு பள்ளியில் புதிதாக 2 வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், புதிதாக 2 வகுப்பறை கூடுதல் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 36 லட்சம் மதிப்பில் கட்டடம் அமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது.
உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,சுமதி, ஊராட்சி தலைவர் கோகிலா பெரியசாமி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர், துணை தலைவர் பத்மினிசின்னதுரை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.