/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
/
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ADDED : ஜன 26, 2025 05:57 AM

உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.94 கோடி மதிப்பில் 21 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது. இப்பணியை கலெக்டர் பிரசாந்த், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, உ. செல்லூர் கிராமத்தில் சேஷ நதியின் குறுக்கே ரூ.7. 95 கோடி மதிப்பில் அணை கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இந்த அணை கட்டுவது மூலம் பாதுார் மற்றும் களவனுார், உ.செல்லுார் கிராம பகுதியில் உள்ள 607 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
பூமி பூஜையில் நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தாலுகா அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கான வாக்காளர் உறுதிமொழியை ஏற்றனர்.