/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏமப்பேர் குளம் அருகே கலையரங்கம் கட்டும் பணி
/
ஏமப்பேர் குளம் அருகே கலையரங்கம் கட்டும் பணி
ADDED : ஜன 08, 2024 06:12 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் குளம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குளம், நகர்ப் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.21 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.
படகு சவாரி வசதியுடன் கூடிய குளமாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகிய வசதிகள் அங்கு உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாராக உள்ளது.
இதன் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்போது, புதிதாக கலையரங்கம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் அரசு நிதியுடன், 10 லட்சம் ரூபாயை பொது மக்கள் பங்களிப்பாக நகர மன்ற தலைவர் வழங்கியுள்ளார்.
அதன்படி 30 லட்சம் மதிப்பில் ரூபாய் 1500 சதுரடி அளவில் துவங்கியுள்ள புதிய கலையரங்கம் கட்டுமானப் பணி 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.