/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமான நல வாரிய சங்க ஆலோசனை கூட்டம்
/
கட்டுமான நல வாரிய சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 30, 2025 05:58 AM

கள்ளக்குறிச்சி :சின்னசேலத்தில் சுபிக்ஷம் கட்டுமான நல வாரிய சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த கூட்டத்திற்கு சுபிக்ஷம் கட்டுமான நல வாரிய சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் தாமோதரன், மாவட்ட துணை செயலாளர் அசோக், மாவட்ட ஆலோசகர் சின்னசாமி, கண்ணபிரான் முன்னிலை வகித்தனர். நகர கவுரவ தலைவர் சக்திவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற தெற்கு மாவட்ட கவுரவ தலைவர் சின்னதுரை, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
சங்க உறுப்பினர்களை அரசின் நல வாரியத்தில் இணைத்து, அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் டி சர்ட், சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை முத்துக்கண்ணு ஒருங்கிணைத்தார்.
நகர பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.