/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள் துவக்கம்
/
புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 02:38 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
விழாவிற்கு, ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோம்பையன், ஊராட்சி தலைவர் நீலாவதி முருகேசன், கிளை செயலாளர் ராமக்கண்ணு, ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் திராவிடமணி, நிர்வாகிகள் ராசுகுட்டி, கிருஷ்ணன், காசிவேல், பூவரசன், தேவராஜ், மணிகண்டன், ஷரிப் விஜய், ரஜினி, சிந்தனைசெல்வன், தமிழரசன், ஊராட்சி செயலர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.